/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EvsLv6lVoAMNA7a.jpg)
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும்படம் 'சாணிக் காயிதம்'. இப்படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக்கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை ‘சாணிக் காயிதம்’ படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் நாயகன் செல்வராகவன் இன்று (05 மார்ச்) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இப்போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்பிடித்துக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் செல்வராகவன் காட்சியளிக்கும் இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)